நல்லதொரு கேள்வி. உண்மை என்னவென்றால் இரண்டாயிரத்து எட்டு ஆரம்பத்தில் இது நிகழ்ந்ததென நினைக்கின்றேன். தமிழுக்கு மொழி மாற்றப் பட்ட பல மென்பொருள்களை மொழிமாற்றியவர்கள் (தமிழ்நாட்டார்) தொடர்ச்சியாக பல ஆங்கில மொழிச் சொற்களை கலந்து பயன்படுத்தியமையால் இலங்கையிலிருந்து தமிழ் மொழிமாற்றம் செய்தவர்கள் தமிழ் (இலங்கை) என தனியாக மொழிமாற்றத்தை ஆரம்பித்தார்கள். (இவ்வழக்கு பல மொழிகளிலும் உண்டு. போர்த்துக்கல், போர்த்துக்கல் (பிரேசில்) என்பது போல)
வேர்ட்பிரஸிலும் தமிழ் மற்றும் தமிழ்(இலங்கை) என இரண்டு மொழிமாற்ற வசதிகள் உள்ளன. தமிழ்(இலங்கை) இனை நான் பொறுப்பெடுத்து மொழிமாற்றம் செய்கின்றேன். தமிழை மொழிமாற்றம் செய்வார் யாரும் இல்லை. யாராவது பொறுப்பெடுப்பின் அதுவும் கிடைக்கக்கூடியதாயிருக்கும்.
தமிழ்நாட்டார் ஆங்கில சொற்களின் பிரயோகத்தை அதிகளவு குறைக்கும் வரையில் தமிழ்(இலங்கை) மற்றும் தமிழ் என இரு பதிப்புக்கள் வந்துகொண்டே இருக்கும்.
]]>Please try to change that “Tamil(Srilanka)” to “Tamil”.
]]>ஒரு அவசர – இணைய வடிவமைப்பு பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதால், மொழிபெயர்பில் எனது பங்களிப்பு சிலநாட்களுக்கு மந்தமாக இருப்பதையிட்டு வருந்துகின்றேன்.
முயற்சிகள் – தொடரட்டும்.. இதுபோன்ற வேறு மொழிபெயர்ப்புப் பணிகளிலும் எதிர்காலங்களில் என்னால் முடிந்த பங்களிப்புக்களை வழங்கி எனது ஓய்வு நேரத்தினை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள தூண்டுகோலாக இருந்த தங்களுக்கு எனது நன்றிகள்.
இவன் – மஸாகி
06.11.2011
*(“மா”ஸாகி அல்ல)
]]>அன்புடன் மாஸாகி,
உண்மையில் ஆங்கிலத்தில் இவை வேறு வேறு சொற்களாக இருந்தாலும் ஒரு தமிழ் பயனாளருக்கு இரண்டுக்குமே மேம்படுத்தல் என்கின்ற சொல் விளக்கமளிப்பதாக இருக்கும் என்பதே என் எணணம். upgrade database என்பதற்கு தரவத்தளத்தை மேம்படுத்தல் என்பதும் update post என்பதற்கு பதிவை மேம்படுத்தல் என்பதும் விளக்கமாக உள்ளது தானே?
பகீ.
]]>நானும் பரீட்சார்த்தமாக சில மொழிபெயர்ப்புக்களைச் செய்து பார்த்தேன். தங்களது அபிப்பிராயத்தின் பின்னர் தொடரலாம்னு நினைத்தேன். எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே..
அதாவது – Update என்பதற்கு மேம்படுத்தல் என்று மொழிபெயர்ப்புச் செய்தால், Upgrade என்பதற்கும் அதே வசனத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லையா..?
தங்களது – இந்தப்பதிவின் மூலம் தமிழ் மொழிபெயர்ப்பானது ஆங்கிலத்துக்கு அச்சொட்டாக நிகராக இருக்க வேண்டும் என்பதை விட – அது சொல்லும் கருத்தை கிரகித்து பிரதிபளிப்பதாக – எளிய மொழி நடையில் சுருக்கமாக இருந்தால் போதுமென விளங்குகின்றது.
முயற்சிக்கலாம நண்பரே – இது வெறும் ஆரம்பம்தான்..
நட்புடன்
மஸாகி – 02022011